முகநூலில் (FACEBOOK ) பதிவு செய்த நடிகர் விஷால்
"முழுக்க முழுக்க முட்டாள் தனமான செயல்.
கரூரில் ஏற்பட்ட விபத்து என் இதயத்தை கனமாக்கியது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனைப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மருத்துவ மனையில் உள்ளவர்கள் மிக விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கு எனது பணிவான வேண்டுகோள், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு
இழப்பீடு வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணி, பிரசாரத்தில் இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்ய வேண்டும். என்பதை இதன் மூலம் வலியுறுத்துகிறேன்." என்று அவர் குறிப்பிட்டார்.

.png)
0 Comments